Posts

Showing posts from August, 2020

கீறல்கள்

  கீறல்கள் மென் நீல நிறத்தில் உடை அணிந்த தாதியர்கள் கம்பீரமாக கூடவே நடக்க , தன் கழுத்து பட்டையை சரி பார்த்துக் கொண்டே வந்த நடுத்தர வயதை தாண்டிய அந்த வைத்தியரின் முகத்தில்   தெரிந்த அந்த அமைதியில் அவளுக்கு   தன்னையறியாமல் ஒரு வித நம்பிக்கை பிறந்தது .   அவருடன் கதைப்பதெற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட   அறையினுள் வரும்படி தாதியர்களில் ஒருவர் மிகவும் பௌவியமாக அழைத்த போது அவளுக்கு   இதயத்தை யாரோ பிராண்டுவது போன்ற உணர்வில் கண்ணில் நீர் வருவேன் வருவேன் என எட்டி பார்த்தது .   அழுவது என்பது கோழைத்தனம் என்பதை நம்ப மறுத்த மனதின் மீது ஒரு நாளுமில்லாத கோபம் பட்டென வந்து போயிற்று . " அம்மா வாங்கோ , உள்ளுக்கு போவம் , எல்லாம் சரியாய் போயிடும் !" அம்மாவின் கையை ஒரு குழந்தையின் கையை தன் கைக்குள் கோர்த்துக் கொள்வது போன்ற அளவில்லா பாசத்துடன் இறுக்கப் பிடித்துக் கொண்டாள் .   அம்மாவின் கைகள் இதமான சூட்டோடு இலேசாக வியர்த்து நடுங்கத் தொடங்கியது .   " தெய்வமே ஏன் எனக்கு இ...