Posts

Showing posts from September, 2020

சர்வதேச ரீதியாக பெண்களுக்கான பொதுவான சவால்கள் என்ன?

Image
  சர்வதேச ரீதியாக பெண்களுக்கான பொதுவான சவால்கள் என்ன? இது பெண்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆண்டாகும் , பல நாடுகளில் பெண் பிரதமர்களும் , பெண் ஜனாதிபதிகளும் , வேறு துறைகள் சார்ந்த பணிகளிலும் முன்னெப்போதையும் விட அதிகமாக, பொறுப்பு வாய்ந்த பதவிகளில் பணியாற்றி வருகின்றனர் . இருந்த போதிலும் மேற்கத்தைய நாடுகள் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பெண்கள் பாலின சமத்துவம் இன்றி பல சவால்களை எதிர் கொள்வதைக் காணக்கூடியதாய் இருக்கிறது . இந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு , பல பெண் ஆளுமைகளை , சர்வதேச ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் , சட்டமியற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட பலரை இப்படியான சவால்களைக் கோடிட்டுக் காட்டும் படி கேட்டதில் பின்வரும் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டன .     தலைமைப் பொறுப்புகளில் அல்லது அதிகார பதவிகளில் பெண்களின் பற்றாக்குறை ஏமி க்ளோபுச்சர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன் நிக்கப் போகும் ஒரு பெண் ஆளுமை. இவருடைய கருத்துக்கள் இப்படியுள்ளன: அனைவர்க்கும் பொதுவான ஒரு தளத்தில் ...

கத்தரீனுக்கு வயது பதினெட்டு!

Image
  கலாச்சார வித்தியாசங்களின் பரிமானங்களும் அளவுகோல்களும்!    (ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.) “எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன. “ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தேன். “ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு வித கோபம் கலந்த பாசம். “நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன் கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது. “ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன் குறைப்பட்டுக் கொண்டாள். “ நான் தொலைபேசியில்க் கூப்பிட்டேன், வைத்தியர் வராததுக்கு நான் என்ன பண்ணலாம்?” பதில் சொல்லிவிட்டு நான் சில ஆவணங்களைச் சரி பார்க்கத் தொடங்க, கத்தரீனின் அடுத்த தாக்குதல் ஆரம்பித்தது. “ வைத்தியர் ஆங்கிலம் மட்டும் தான் பேசுவார், நீ சிலவேளை உன்னுடைய மொழியில் அழைத்திருந்தால் அவருக்குப் புரிந்திருக்காது. அது தான் அவர் என்னைப் பார்க்...